2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வங்காலை கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை

Niroshini   / 2021 ஜூன் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  வங்காலை, கடற்கரையில்    இன்றைய தினம் (15) காலை, உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மையில், இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருள்கள் என சந்தேகிக்கப்படும். சில பொருள்கள்  மன்னார் - வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரையில் கரையொதுங்கின.

இந்த நிலையில், இன்று (15), ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் கடலாமை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில், வங்காலை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த வாரம் சிலாபத்துறை கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில், கடலாமை ஒன்று கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X