Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 26 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகன் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை கையகப்படுத்தும் பொது அறிவித்தல், பிரதேச செயலாளரினால் நேற்று மாலை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை, முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இவ்வாறு பல முறை இடம்பெற்ற முயற்சிகள் அனைத்தும,; மக்களின் போராட்டங்கள் காரணமாக தடுக்கப்பட்டிருந்தன
இருப்பினும், குறித்த பிரதேசத்தினை சுவீகரிககும் முயற்சியினை மட்டும் கடற்படையினரும், பாதுகாப்பு அமைச்சும் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். இதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய பிரதேச செயலாளரினால் மீண்டும் சுவீகரித்தல் உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முகாமைச் சூழ உள்ள பாதுகாப்பு அரண்கள், சீமெந்து அரண்களாக மாற்றப்படுகின்றன.
குறித்த 617 ஏக்கர் காணியை, கடற்படையினருக்கு வழங்க முடியாது என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதற்கு முரணாக மீண்டும் சுவீகரிக்கும் முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago