2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வடக்கில் அடைமழை

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுசங்க

வட மாகாணத்தின் பல பகுதிகளில், கடந்த 3 தினங்களில் பெய்த அடை மழையால், அப்பகுதிகளில் ஏற்பட்ட வரட்சியின் தாக்கம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

வரட்சி காரணமாக, சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில், மழையை எதிர்பார்த்திருந்த தருணத்தில், இந்த நாட்களில் அடை மழைபெய்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த 3 தினங்களில் பல மணித்தியாலங்களாக அடை மழை பெய்துள்ளதால், வரண்டு காணப்பட்ட குளங்களிலும் நீர் தொட்டிகளிலும் மக்கள் நீரை சேமித்து வைக்கக்கூடியதை காணமுடிந்தது. 

மேலும், பெய்த அடை மழையால், வடக்கில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள வீதிகள் வௌ்ள நீரால் முழ்கியிருந்தன. இதனால், அப்பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .