2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வடக்கில் ஒருவருக்கு அடித்தது அதிஷ்டம்

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

தேசிய லொத்தர் சபையினால் முன்னெடுக்கப்படும் சீட்டிழுப்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் பணப்பரிசில் விழுந்துள்ளது.

அதகோடிபதி என்ற சீட்டிழுப்பு முறையில் கடந்த 05.02.2022 அன்று குலுக்கப்பட்ட சீட்டில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

இது புதுக்குடியிப்பில் விழுந்த 5 ஆவது வெற்றியாளராக காணப்படுகின்றார்.

இதையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,  முல்லைத்தீவு,  முள்ளியவளை,  தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, மாங்குளம், மல்லாவி, விசுவமடு, உடையார்கட்டு நகர் பகுதியில் அதிஷ்டலாப சீட்டுக்கள் தற்போது அதிகளவில் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X