2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் மீன்களுடன் 250 ’கால்’ கள் சிக்கின

Niroshini   / 2021 ஜூன் 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கரைச்சிக்குடியிருப்பு பகுதியில், மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில், சட்டவிரோதமாக 250 கால் போத்தல் மதுபானங்களை கொண்டு சென்ற இளைஞன் ஒருவரை, சிறப்பு அதிரடிப்படையினர், நேற்று (13) மாலை கைதுசெய்துள்ளனர்.

முள்ளியவளை - நீராவிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன், வாகனங்களில் மீன்களை ஏற்றி செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி, மதுபான போத்தல்களை ஏற்றிக்கொண்டு செல்லும் போதே, கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், முல்லைத்தீவுn பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X