2025 மே 12, திங்கட்கிழமை

வடக்கு வைத்தியசாலைகளும் மத்தியின் கீழ் வருகின்றன

Niroshini   / 2021 ஜூன் 15 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, சுகாதார அமைசச்ர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த னோசனைக்கு, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை, ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி, அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையொன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X