2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’வடக்குக்கான அபிவிருத்தியை ராஜபக்ஷ குடும்பமே செய்தது’

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வடக்குக்கான அபிவிருத்தியை, மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பமே செய்து கொடுத்ததென்பதை, யாரும் மறந்திருக்க மாட்டார்களென, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - மல்லாவி நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம், இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த அரசாங்கம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான அபிவிருத்தியைச் செய்யக்கூடிய வாய்ப்​பைத் தந்துள்ளதாகவும் நல்ல அபிவிருத்தியைச் செய்வதற்கு, எல்லோரும் தயாராக வேண்டுமெனவும் கோரினார்.

அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், இந்த உணவகத்தை, வடமாகாணம் முழுவதும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .