2025 மே 08, வியாழக்கிழமை

வடக்குக்கு தடுப்பூசி: ’விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும்’

Niroshini   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் விரைவுபடுத்துவதற்கான அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் விரைவுபடுத்த வேண்டுமென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார், இதற்போதெ, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கெனவே, 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக குறைந்தது ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தடுப்பூசிகளாவது அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

அதேபோன்று, வவுனியா மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு இலட்சம் தடுப்பூசிகளையும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தது தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளையாவது  விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, அமைச்சரின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, கிடைக்கின்ற தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பாதிப்புகளின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கெனவே அமைச்சரவையில் உறுதியளிக்கப்படடது போன்று யாழ்ப்பாணத்துக்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, விரைவில் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X