2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘வடக்கை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்’

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாணத்தை அழகுபடுத்தி முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சமூக பாதுகாப்பு பிரிவின் வடமாகாண இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.

வவுனியாவில், நேற்று, பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கை அழகுபடுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக சித்திரங்கள் வரைகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம். இந்த சித்திரங்களானது அந்தந்த பகுதியினை பிரதிபலிக்கின்ற கலாசாரங்களை உள்ளடக்கியதாகவே அமையும்.

“ஆகவே வீணான போலி பிரசாரங்களை செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்துக்கான அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .