2025 மே 22, வியாழக்கிழமை

வடமாகாண ஆளுநருடன் மன்னார் மக்கள் சந்திப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

வட மாகாண ஆளுநருக்கும் மன்னார் மாவட்ட மக்களுக்கும் இடையிலான சந்திப்பு, மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (17) காலை நடைபெற்றது. 

இச்சந்திப்பில் வடமாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், வடமாகாண ஆளுநர் கேட்டறிந்துகொண்டதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இச்சந்திப்பு, கடந்த 3ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம், ஆளுநர் வருகைதரவில்லை என்பதால், சந்திப்பு பிற்போடப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X