2025 மே 19, திங்கட்கிழமை

வட்டுவாகல் ஆற்றை வெட்டிவிடுமாறு மீனவர்கள் கோரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பி, வட்டுவாகல் பாலத்தை மூடி தண்ணீர் காணப்படுவதால், பாலாத்தின் ஊடாக வீதியால் போக்குவரத்து செய்பவர்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். 

இந்நிலையில் வட்டுவாகல் பாலத்தை மூடி நீர் காணப்படுவதால் இதனை பெருங்கடலுடன் வெட்டிவிடுமாறு மீனசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லை மத்தி நந்திகடல் முகாமைத்துவ குழுவின் தலைவர் சண்முகலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக வட்டுவாகல் ஆற்று தொடுவாயினை பெருங்கடலுடன் வெட்டிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் மழைபெய்து வருவதா,ல் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதனால் வட்டுவாகல் பாலம் ஊடாக பயணம் செய்யும் ஊர்திகள் அச்சத்துடன் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X