Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைதீவு மாவட்ட மீனவர்களின் வேண்டுகோளுக்கமைய, வட்டுவாகல் மற்றும் நாயாற்றுப் பகுதிகளை ஆழப்படுத்துவதற்கான அளவீட்டுப் பணி நிறைவடைந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அ.ஜெயராஜ் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய, வட்டுவாகல் பகுதியில், ஒரு கிலோமீற்றர் நீளமும் 300 மீற்றர் அகலமும் கொண்ட பகுதியில் உள்ள ஏரிகளை அகற்றி ஆழப்படுத்துவதற்கான அளவீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளனவெனவும் கூறினார்.
ஆழப்படுத்தலுக்கான செலவீடு, ஏனைய செயற்பாடுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவெனவும் விரைவில் வட்டுவாகல் மற்றும் நாயாற்று பகுதிகளை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும், ஜெயராஜ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago