2025 மே 19, திங்கட்கிழமை

வன்னி மாவட்ட பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று, நாளை (14)  காலை 10 மணிக்கு, சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

வன்னி மாவட்ட பட்டதாரிகள் அனைவரையும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினை செயற்றிறன் கொண்ட அமைப்பாக உருவாக்கும் பொருட்டு பேராசியர் மோகனதாஸின் நேரடி கண்காணிப்பின் கீழ் புதிய  நிர்வாகத் தெரிவு மற்றும் வவுனியா, முல்லைத்தீவு. மன்னார் மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்கான இணைப்புப்பட்டதாரிகள் சங்கத்தை உருவாக்குதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X