2025 மே 19, திங்கட்கிழமை

’வன்னேரிக்குளம் கிராம வீதியைப் புனரமைப்பதற்கு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்துக்கான பிரதான வீதியைப் புனரமைப்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டுமென, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் முருகேசு சந்திரகுமாரிடம், வன்னேரிக்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அம்மக்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, வன்னேரிக்குளம் வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக, வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராம அலுவலர் பிரிவுகளில் வாழ்கின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளனவெனவும் தெரிவித்தனர்.

“2011ஆம் ஆண்டில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நீங்கள் பணியாற்றிய காலத்தில், திருமுறிகண்டியில் இருந்து அக்கராயன் வரையான வீதியை நிரந்தரமாகப் புனரமைத்திருந்தீர்கள். அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் வழியாகப் பூநகரி, பல்லவராயன்கட்டுச் சந்தி வரையான வீதி புனரமைக்கப்பட வேண்டியுள்ளது” எனவும், அந்த மக்கள் எடுத்துக்காட்டினர்.

இந்நிலையில், இவ்வீதியைப் புனரமைப்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X