2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘வயற்காணிகளை விடுவித்து தரவும்’

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் உள்ள வயற்காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

1984ஆம் ஆண்டு, அரசாங்கத்தால் தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் எனினும், 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், இதுவரை தமது வயற்காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதனால், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தாம் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை எதிர்பார்த்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மகாவலி அபிவிருத்தி வலயம் எனும் பெயரில், தமது காணிகளில் இருந்து தம்மை வெளியேற்றி விட்டு, சிங்கள மக்களுக்கு, அரசாங்கம் காணி உரிமையை வழங்குவதாகவும், மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .