2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வயிற்றோட்டத்தால் குழந்தை உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

வயிற்றோட்டம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த சுகேந்திராசா  துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மே மாதம் 5ஆம் திகதி குறித்த ஆண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை பெற்றோர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே, குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .