2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கொக்குவெளி பகுதியில் வசித்து வந்த 86 வயதுடைய வயோதிப பெண்னொருவரின் சடலம், நேற்று, பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள குளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்த இந்த வயோதிப பெண் தொடர்பாக, மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுக் காலை மாடு மேய்ப்பதற்கு குளப்பகுதிக்கு சென்றவர்களால்,  பேயாடிகூழாங்களத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த வயோதிப பெண் குளிப்பதற்காக கூறி சென்றதாகவும் எனினும் தாம் குளப்பகுதியில் தேடியும் அவரை காணத நிலையிலேயெ நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .