Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 15 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில், குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“அத்துடன், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தலின் ஊடாக, குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு, சம்மளங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, கருவேலங்கண்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.
கரைதுறைபற்றில் மாமூலை கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதுடன், துணுக்காயின் பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாவட்டத்தில் வரட்சி நிலைமை அதிகரிக்குமானால் குடிநீர் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago