2025 மே 03, சனிக்கிழமை

வர்த்தகர்களுக்கும் சாரதிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை

Niroshini   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி சேவைச் சந்தையில், வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்த வாகன சாரதிகளுக்கும், இன்று (14) பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இதன்படி, 45  பேரிடமிருந்து பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்தே, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினாரால், கிளிநொச்சி சேவைச் சந்தையில், வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்த வாகன சாரதிகளுக்கும், பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X