2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வலயக் கல்வி பணிமனைக்கான கட்டடம் விரைவில் திறக்கப்படும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரந்தரக் கட்டடமொன்று விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 112 பாடசாலைகளில், தற்போது 104 பாடசாலைகள் இயங்குகின்றன. அதில் 32,500 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர்.

பாடசாலைகளின் வளங்களை அதிகரிப்பதும் மாணவர்களை நிர்வகித்து கல்வியில் முன்னேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்கின்ற வலயக் கல்விப் பணிமனைக்கு, நீண்ட காலமாக நிரந்தரக் கட்டடமொன்று இல்லாத குறை காணப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு வலயக் கல்விப் பணிமனைக்கென நிரந்திர கட்டமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கட்டடத்தை விரைவில் திறந்த வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .