2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘வலைப்பாட்டில் வாழ்விடம் பறிபோகாது’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி, வலைப்பாட்டில் உள்ள வாழ்விடம் பறிபோகும் என்ற அச்சம் வேண்டாம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.

கிளிநொச்சி - வலைப்பாடு மீனவர் சங்கத்துடன், இன்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய இடங்கள் பறிபோகும் என்ற அச்ச உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாக, மீனவர்களால் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரியமாக தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்த பகுதியில், தமக்கான தொழில் அங்கிகாரத்தை வழங்குவதற்கு இழுத்தடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதியவர்களை அப்பகுதியில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மீனவர்கள் கூறினர்.

இதனைக் கவனத்தில் கொண்ட அங்கஜன் எம்.பி, இப்பிரச்சினைக்குளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .