2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

வவுனியா இரட்டைக் கொலை; தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்

Freelancer   / 2023 நவம்பர் 25 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். 

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.  

இதன்போது, மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

குறித்த மூவரும் தலைமறைவாக இருந்ததால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவு  கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் சந்தேக நபர்களில் ஒருவர், ஹொரவப்பொத்தானை பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். 

அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X