Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சமுர்த்தி வீட்டுத்திட்டம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள், முற்றாக இடம்பெறவில்லை எனவும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து, புளியங்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள், வவுனியா மாவட்ட செயலக அரசாங்க அதிபரிடம், முறைப்பாடொன்றைச் செய்தனர்.
அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வவுனியா, புளியங்குளம் பகுதியில், கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியேற்றப்பட்ட மக்களுக்கான சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக, அப்பகுதி மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
“வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக, அரச மட்டத்தில் இடம்பெற்ற விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை. மாறாக உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். அது தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வரவில்லை.
“இன்று வரையில் எமது வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்” என, அம்மக்கள் தமது முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதத்தை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக, இன்று அங்கு சென்ற அம்மக்கள், அரசாங்க அதிபர், அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் அதனைக் கையளித்துவிட்டுத் திரும்பினர்.
20 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
5 hours ago