2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், இணைந்த நேர அட்டவணைக்கமைய, போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு, இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர்  ஒத்துழைக்கவில்லையென, வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.கே.ராஜேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நேற்று (21) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணை செயற்பாடு, வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் இதனால் பஸ்களுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்பட்டு, பொதுமக்களுக்கான சரியான சேவையை வழங்க முடியாதுள்ளததெனவும் கூறினார்.

200 மில்லியன் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்ட பஸ் நிலையம் இருக்கும் போது, அதன் வாசலில் தான் பஸ்கள் தரித்து நின்று, சேவையில் ஈடுபடுகின்றனவெனவும், அவர் சாடினார்.

இது தொடர்பில் சரியான தீர்மானமொன்றைப் பெறுவதற்கு போக்குவரத்து சபையினர் ஒத்துழைக்கவில்லையெனவும், ராஜேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் கவஞ்செலுத்திய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வவுனியாவில் இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பதிலளிப்பதற்கு, இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் எந்தவோர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .