2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியை மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள்  இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிக்கு, இன்று (11) முதல் விடுமுறை விடுவிக்கப்பட்டு, அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பலத்த பாதுகாப்புடன் பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் கொரோனா தொற்றாளிகள்  அதிகம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை இராணுவத்தினர் அதிகரித்து வருகின்றனர்.

அதனடிப்படையில், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X