Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலேயே, டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகக் கூடிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்டச் சுகாதாரப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் சுகாதார பணிமனையில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போது, வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே, டெங்கு நுளம்புப் பரவக்கூடிய இடங்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில், நகரசபை பகுதிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர்கள், அந்த பகுதிக்குரிய கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோத்தர்கள், கிராம மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி, வீடு வீடாகச் சென்று டெங்கு பரவும் இடங்களை அழிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனரெனவும், அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையை, ஆறு கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகத் தெரவித்த அவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதனை மீளாய்வு செய்வோமெனவும் கூறினார்.
வவுனியாவில், வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள், அரச ஊழியர் விடுதிகள் போன்றன பிரச்சினைக்குரிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளனவெனவும் அந்த இடங்களையும் தமது குழுவினர் கண்காணித்து வருகின்றனரெனவும், மகேந்திரன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025