Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 16 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பொலிஸாருக்கு எதிராக, பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியாவில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், எந்தவித முன்னறிவித்தலுமின்றி தன்னை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து. பொலிஸார் கைதுசெய்தனரெனவும் இது, பொலிஸாருடைய செயற்பாடு பக்கச்சார்பான செயற்பாடாகவே இருந்ததெனவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், 'தமது உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'என்றும், அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழங்கியுள்ளோம், வடமாகாண ஆளுநர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், 'குறித்த விடுதியினூடாக நகரசபைக்கு சேரவேண்டிய மிகுதி பணத்தை நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், வாடிவீடு என்பது நகரசபையின் சொத்து. அதனை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்' என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago