Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.தணிகாசலம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.
இதன்போது சுதந்திரகட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுசேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 25 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.
மக்கள் விடுதலை முண்ணியின் உறுப்பினர் ஒருவர் சமூகமளித்திருக்கவில்லை.
இதன்போது, வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்று வாதப்பிரதி வாதங்கள் கடுமையாக நடைபெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சபையின் வரவு - செலவுத் திட்டத்தில் தவிசாளர் தனது பகுதிக்கே முக்கியத்துவம் வழங்கியதுடன், இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் மக்கள் சார்பான வேலைத்திட்டத்துக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவு திட்டம் வாக்கெடுபபுக்கு விடப்பட்டது.
பாதீடுக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணனி, சுசேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாதீடுக்கு ஆதரவாக தமிழ்த் கூட்டமைப்பை சேர்ந்த 7 பேர் வாக்களித்ததுடன், தமிழ் கூட்டமைப்பை (ரெலோ) சேர்ந்த சபையின் உபதவிசாளர் யோகராயா நடுநிலைமை வகித்திருந்தார். இதனால் சபையின் பாதீடு பெரும்பாண்மை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.
இது தொடர்பாக சபையின் தவிளார் இ.தணிகாசலத்திடம் கேட்டபோது,
எமது சபையின் வருமானத்துக்கு ஏற்பவே வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2019ஆம் ஆண்டுக்கான சில அபிவிருத்தி திட்டங்கள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக வழங்கப்பட்ட கம்பரெலிய நிதி ஊடகாவே செய்யப்பட்டது.
எனவே, இவர்களது குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. அது அரசியல் காழ்ப்புணர்சி கொண்டது. எம்மை குற்றஞ்சாட்டி அரசியல் இலாபம் தேட அவர்கள் முனைகின்றார்கள். நாம் எமது மக்கள் சார்பாகவே செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
18 May 2025