2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள், புதன்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளதாக, வளாக முதல்வர் கலாநிதி டி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில், ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென, உயர் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியிருந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பிரயோக விஞ்ஞானபீடம், வர்த்தகப் பீடங்களின் கற்றல் செயற்பாடுகள், புதன்கிழமை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நாளை (21) காலை 9 மணியில் இருந்து 3 மணி வரை வருகை தரமுடியுமெனவும், வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X