2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வளாகத்தில் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில், புதிதாக தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி டி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், இந்த வர்த்தமானி அறிவித்தல், ஜனவரி மாதம் 30ஆம் திகதியன்று வெளியிடப்பட்டதாகவும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், வவுனியா வளாகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையும் உருவாக்கப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.

இதேவளை, வவுனியா வளாகத்தில், வியாபார கற்கைள் பீடம், பிரயோக விஞ்ஞானப் பீடம் என்பன ஏற்கெனவே செயற்பட்டு வந்த நிலையில், மூன்றாவது பீடமாக, இந்தத் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும், தொழில்நுட்பவியல் துறை மற்றொரு பீடத்தின் அலகாக இணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், அதில் 100 மாணவர்கள் வரையே கற்கை செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டனரெனவும் கூறினார்.

தற்போது, இத்துறை தனிப்பீடமாக உருவாக்கப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில், 150 மாணவர்கள் வரை அனுமதிக்கபட்டுவார்களெனவும், முதல்வர் கலாநிதி டி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .