2025 மே 09, வெள்ளிக்கிழமை

வவுனியா விபத்தில் மஸ்கெலியா இளைஞன் பலி

Niroshini   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - புளியங்குளம் பகுதியில், இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 21) என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருள்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்று, புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் குறித்த இளைஞனும் சாரதியும் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக, புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X