2025 மே 21, புதன்கிழமை

வவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவிலிருந்து வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை, இன்று (23), வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது.

வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக, இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலை நோக்கிய வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஆரம்பமாகியது. 

வவுனியாவிலிருந்து பிரதான ஏ9 வீதியால் செல்லும் குறித்த நடைபாதை யாத்திரையானது, வீதியிலுள்ள கோவில்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று  நல்லூர் திருத்தலத்தை சென்றடையவுள்ளது.

பிரதான வீதியிலுள்ள கோவிலின் நிர்வாக சபையினர் வேல்தாங்கிய பாதையாத்திரையில் கலந்துகொள்ளும் அடியார்கள், தங்களது கோவில்களில் தங்கியிருக்கும் தினத்தில் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X