Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில், நேற்று (01), எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக, பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்த இல்லத்தரசி, சமையல் செய்துவிட்டு, எரிவாயு அடுப்பை நிறுத்தி வைத்தததன் பின்னரே, திடீரென தீப்பிடித்து, அந்த எரிவாயு அடுப்பு ஒளிவிட்டு வெடித்ததாகவும் கூறினார்.
அடுப்பு தீ பற்றி எரியும் போது, அயலவரை அழைத்ததாகவும் மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க எரிவாயு சிலிண்டரில் இருந்து ரெகுலேட்டரை அகற்றியதாகவும், குறித்த இல்லத்தரசி கூறினார்.
சம்பவம் தொடர்பில், இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago