2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பஸ்கள்களில் பயணித்தோர் மற்றும் வியாபார நிலையங்களில் தங்கியிருந்தோர் என 74 பேருக்கு, வவுனியா வடக்கு - புளியங்குளம் பகுதியில் வைத்து, இன்று (09) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

ஒமேகா, ஹைராமனிக் ஆடைத்தொழிற்சாலைக்கு பஸ்ஸில் பயணித்த ஊழியர்கள், புளியங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தங்கி இருந்தவர்களுக்கே இவ்வாறு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, ஆடைத்தொழிற்சாலைக்கு பஸ்ஸில் செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிக்கிறார்களா, வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பேணுகின்றார்களா என்பது குறித்தும் அவதானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .