Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை, 21 ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கிய, முறைகேடான பதவி உயர்வை இரத்துச் செய்யக்கோரி, இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் 15 பேர், சாலைக்கு முன்பாக இன்று (20) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட, இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா சாலையின் 21ஊழியர்களுக்கு, கடந்த சனிக்கிழமை பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப் பதவி உயர்வானது, எவ்வித தகுதி தராதம் பாராது, அரசியல் ரீதியில் முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 20 , 25 வருடங்களாக பணிபுரியும் எவரும் உள்வாக்கப்படவில்லை. அதேவேளை, நாளாந்தம் 750 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்படவுமில்லையென, அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பதவி உயர்வு, ஜக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தை சார்ந்தே வழங்கப்பட்டுள்ளாத தெரிவித்த அவர்கள், பதவி உயர்வு வழங்குவதாக தெரிவித்து மேலும் சிலரை தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டனர்.
முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வை இரத்துச் செய்து, நேர்முக பரீட்சை நடத்தி பதவி உயர்வு வழங்கப்படுமாயின், அதனை ஏற்றுக்கொள்வோம். இல்லையேல் 14 நாள்களின் பின்னர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம் என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago