2025 மே 03, சனிக்கிழமை

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

  க. அகரன் 

வவுனியா -  மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் குழு ஒன்று, தாக்குதல் மேற்கொண்டு  விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம், நேற்று   (18) இரவு இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில்,  இருவர் படுகாயமடைந்ததுடன், வீடும் பலத்த சேதத்துக்குள்ளானது.வாள் மற்றும் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸார்,  தாக்குதலாளிகள் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும் தலைக்கவசம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X