2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் கடும் காற்று: 13 வீடுகள் சேதம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், நேற்று முன்தினம் (14) வீசிய கடும் காற்று காரணமாக, 13 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அந்தவகையில், புளியங்குளத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும் தாண்டிக்குளத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், கள்ளிக்குளத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், பிரப்பமடுவில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு அங்கத்தவர்களும், கற்குணாமடுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களும், முதலியாகுளத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் கண்ணாட்டியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுடன், பின்னர் ழுமுமையான தொகையை இழப்பீடாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்ட செயலக்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .