Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
க. அகரன் / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா இலங்கை திருக்கலவன் பாடசாலையில், மக்களின் தேவைகளை இலகுபடுத்த, இன்று (10) நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிறப்புச் சான்றிதழ் மொழிபெயர்ப்பு மற்றும் புதிதாக பெற்றுக்கொள்ளல், விவாகமாகாத தம்பதியினருக்கு புதிதாக விவாகம் செய்து வைத்தல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை, அரச காணி மற்றும் கமநல சேவை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு, ஒய்வூதியம், நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு போன்ற பல்வேறு சேவைகளை மக்கள் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் பிரத்தியேக செயலாளர் பிரியான் குணவர்த்தன, அமைச்சின் மேலதிக செயலாளர் திலகரட்ன, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஞ்சிதா வியாங்கொட, உதவி செயலாளர் சி. மதிவாணன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உதவி பிரதேச செயலாளர் சாரதாதேவி மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago