2025 மே 19, திங்கட்கிழமை

வவுனியாவில் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஆறுமுகநாவலரின் 140ஆவது நினைவு தினம், வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில், இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் சுமந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா நகரசபையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டபோதிலும், நகரசபை தவிசாளர் உள்ளிட்ட நகரசபையின் பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X