2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு - குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவில் நிர்வாகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், வவுனியாவில் இன்று (18), சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், நகரசபை உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, புலம்பெயர்ந்து வாழ்ந்து மறைந்த உறவுகளினதும் ஆபத்தான கடற் பயணங்களில் மரணித்த உறவுகளினதும் ஆத்மாக்களுக்கு சாந்தி வேண்டி, விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .