Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
போதைக்கு எதிராக, வவுனியாவில், இன்று, பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து, இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தது.
வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலாளர் ஐ. எம். ஹனீபா கலந்துகொண்டு உரையாற்றியிருந்ததுடன், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலுன்களையும் பறக்கவிட்டார்.
இந்நிலையில், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை தாங்கிவாறு கவனயீர்ப்பு ஊர்வலமும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, குருமன்காட்டுச் சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா சமூக சேவைகள் திணைக்களம் வரை சென்றடைந்து முடிவடைந்தது.
இதன்போது, வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள், செட்டிகுளம் பிரதேச செயலளார், பாடசாலை அதிபர்கள், முதியோர் சங்க பிரதிநிதிகள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர் வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago