Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - நைனாமடுவில் நேற்று (06) மாலை, மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
மாமடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. செனரத் தலைமையிலான பொலிஸார், நேற்று மாலை நெடுங்கேணி - சேமமடு வீதியில் இருந்து வவுனியா - பூந்தோட்டம் நோக்கி சட்டவிரோதமான முறையில் 13 முதிரை குற்றிகள் டாட்டா கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்கையில் வாகனத்தை வழிமறித்துள்ளனர். எனினும் சாரதி வாகனத்தை நிறுத்தாது வேகமாக செலுத்தியுள்ளார்.
வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார், அக்போபுர - மாமடு பகுதியில் வாகனம் வீதியோரத்திலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, சோதனை மேற்கொண்ட பொலிஸார், அனுமதி பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தின் சாரதி, உதவியாளர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா - சேமமடு, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 33, 25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago