2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மர்ம மனிதர்கள் நடமாட்டம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மதவுவைத்தகுளம் பிரதேசத்தில், மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளதாக, அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மதவுவைத்தகுளம் பிரதேசத்தில், கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப் பூச்சுகளை பூசிக்கொண்டு நிர்வாணமாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளனர்.

குறித்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்த நிலையில், மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து, பிரதேச மக்கள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம், முறைப்பாடு செய்தும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும், மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X