Editorial / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.
குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாகவும் இதனை கண்ணுற்ற விவயாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து அம்மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொள்ளி மருந்தையும் நீரில் கலந்து குடிக்க வைத்துள்ளார்.
அதனை அம்மாடுகள் பருகி உயிரிழந்துள்ளதாக அக்கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனைவிட அந்நீரினை பருகிய ஏனைய மாடுகளும் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம், தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




21 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago