Freelancer / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊர்வலம் நேற்று (05) வவுனியாவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைகழக முன்றலில் இருந்து நேற்று முன்தினம் (04) ஆரம்பமாகிய பேரணி, இரணைமடுவில் இருந்து நேற்று (05) முல்லைத்தீவை நோக்கி ஆரம்பமாகியது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்தப் பேரணியில் பங்குபற்றியிருக்கும் நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கிருந்து பஸ்ஸில் பயணித்து பேரணியில் கலந்துகொண்டனர்.
இதன்போது, முன்னாள் வன்னி மாவட்ட எம்.பி சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். R
58 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago