Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகர்ப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால், சுகாதாரத் திணைக்களப் பூச்சியலாளர்கள் ஆய்வுக்குழுவின் உத்தியோகத்தர்களால் வீட்டுக்கிணறுகளில் டெங்கு நுளம்பு பெருக்கப் பரிசோதனைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மக்களின் அன்றாட செயற்பாடுகள், நடவடிக்கைகளில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வுகள் அற்று செல்வதையும் அதனால் ஏற்படக்கூடிய பின்னர் விளைவுகளையும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாகவே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, வவுனியா நகர எல்லைப்பகுதிகளிலுள்ள வேப்பங்குளம், குருமன்காடு, பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பூச்சியலாளர்களின் ஆய்வுக்குழுக்கள் மூன்று, வவுனியா சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து கிணறுகளில் அண்மைக்காலங்களில் விடப்பட்டு, மீன்களின் பெருக்கம் அதனுடன் இணைந்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இணங்காணுதல் கிணறுகளில், நுளம்பு டெங்கு நுளம்பின் பெருக்கம் போன்ற பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
சில கிணறுகளில் விடப்பட்ட மீன்குஞ்சுகள் கிணறு சுத்திகரிப்பு கிணறு இறைப்பு கிணறுகளுக்கு குளோரின் பயன்படுத்தல் போன்ற நடவடிக்கையால் முற்றாக நுளம்பு குடம்பிகளைக் கட்டுப்படுத்தி, குடம்பிகளை உண்ணும் கப்பி மீன்குஞ்சுகள் அழிந்து போயுள்ளதையடுத்தும், நுளம்பு பெருகும் இடங்களை இணம்காணுதல் போன்ற செயற்பாடுகளையும் மலேரியா தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, இவர்களுக்குப் பூரண ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் பொதுமக்கள் வழங்கி, டெங்கு நுளம்பு, மலேரியா பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு, உத்தியோகத்தர்கள் கோருயுள்ளனர்.
20 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
28 minute ago