2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் விழிப்புணர்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் போத்தல்களின் பாவனை தொடர்பாகவும் அதன் மீள் சுழற்சி தொடர்பாகவும் இன்று (16) வவுனியா நகரசபையிலும் நகர்ப்பகுதியிலும் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவனியா நகரசபைத் தவிசாளர் இ. கௌதமன் தலைமையில், வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும் வேறு இடங்களிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக சேமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு செயற்றிட்டமானது, வவுனியா நகர்ப்குதியில் விசேடமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபையின் உறுப்பினர்கள், வவுனியா வளாக மாணவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான சேமிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .