2025 மே 21, புதன்கிழமை

வவுனியாவில் வெள்ளம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிப்பதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையால் வவுனியா - மன்னார் வீதி, காமினி மகா வித்தியாலத்துக்கு முன்பான பகுதி மற்றும் தாண்டிகுளம், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன், தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் குறித்த வீதிகளினூடான  போக்குவரத்தும்  பாதிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .