2025 மே 21, புதன்கிழமை

வவுனியாவுக்கு அஹமட் கீட் விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் கீட், நேற்று (17) வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்றார்.

இதன்போத, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், அவர்களது தற்போதைய நிலை, தீவிரவாத தாக்குதலின் பின்னரான நிலைமைகள், அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

முன்னதாக வவுனியா, குருமன்காடு கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் வவுனியா மாவட்ட மத நல்லிணக்க குழுவினரை சந்தித்து, தீவிரவாத தாக்குதலின் பின்னர் மத நல்லிணக்கம் குறித்தும், தற்போது மத நல்லிணக்க நிலைமைகள் தொடர்பாகவும், அஹமட் கீட் கலந்துரையாடிருந்தார்.

குறித்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் கருத்து கூற மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .