2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவுக்கு சமனும் கிளிநொச்சிக்கு ரூபாவதியும் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், மு.தமிழ்ச்செல்வன்,சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

வவுனியா மாவட்டத்தின் புதிய செயலாளராக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.எம்.சமன் பந்துலசேனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய ரூபாவதி கேதீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும், இன்று (27) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

வவுனியா மாவட்டச் செயலாளராக இருந்த ஐ.எம் ஹனீபா, பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையிலேயே, அநுராதபுர மாவட்டத்தின் உதவி‌ச் செயலாளராகவும் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.எம்.சமன் பந்துலசேன, வவுனியா மாவட்டத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே​வேளை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக, மீண்டும், ரூபாவதி கேதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலம் தொட்டு 2015ஆம் ஆண்டு வரை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக பணியாற்றி அவர், கிளிநொச்சி மாவட்டத்தை யுத்தப் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீளக் கட்டியமைப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.

பின்னர், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகக் நியமிக்கப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X